Page Loader
கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம்
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தப்பியோட்டம்.

கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம்

எழுதியவர் Srinath r
Oct 30, 2023
03:49 pm

செய்தி முன்னோட்டம்

கோவை மத்திய சிறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த கைதி தப்பி ஓடினார். நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்த விஜயரத்தினம்,32, கடந்த 2019 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோவை மத்திய சிறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்ற நன்னடத்தை அடிப்படையில், 20 கைதிகளுடன் விஜயரத்தினமும் தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பாரதியார் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பணிக்கு வந்த விஜய்ரத்தினம், நேற்று காலை மாயமானார். இதனை அடுத்து சிறைத்துறையினர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

2nd card

3 வார்டன்கள் சஸ்பெண்ட்

பணியில் கவனக் குறைவாக செயல்பட்டதற்காக, 3 சிறை வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைமை வார்டன் கனிராஜ், இரண்டாம் நிலை வார்டன்களான ஜெகநாதன், விக்னேஷ் குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்க் இத்திட்டத்தில், முதல் முறையாக கைதி ஒருவர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.