Page Loader
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு 

புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Dec 31, 2023
12:28 pm

செய்தி முன்னோட்டம்

ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவது போல இந்த வருடமும் புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் 1000 ரூபாயை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை வழங்க இருப்பதாக புதுச்சேரி வேளாண்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக பொங்கல் பரிசு டெபாசிட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 4 ஆம் தேதி இந்த பணம் மக்களை சென்றடையும் என்று புதுச்சேரி அரசு கூறியுள்ளது. இந்த வருடம் மொத்தம் 1 லட்சத்து 30,791 சிவப்பு ரேசன் அட்டைதாரரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

புதுச்சேரி: பொங்கல் பணம் ₹1,000 4ஆம் தேதி தரப்படும்