தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: பாமக அறிக்கை
செய்தி முன்னோட்டம்
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், பாமக நிறுவனர், மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 'மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. மேலும் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாமகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த அதிமுக முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
தேர்தல் கூட்டணி!
#அரசியல்Post | தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதில்#SunNews | #AnbumaniRamadoss | #PMK | @draramadoss pic.twitter.com/jiXgU5ymWv
— Sun News (@sunnewstamil) February 1, 2024