
டெல்லி கர்தவ்யா பாதையில் நினைவு பூங்காவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் இருக்கும் நினைவு தோட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற கொண்டாட்டங்களை பிரதமர் மோடிஇரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.
அந்த கொண்டாட்டங்களின் நிறைவை குறிப்பதற்காக இந்த நினைவு பூங்கா இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.
'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிறைவு விழாவில் பிரதமர் மோடி குடிமக்களிடம் உரையாற்ற உள்ளார்.
இதற்காக நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் டெல்லியில் கூடியுள்ளனர்.
இதற்காக நாட்டின் 766 மாவட்டங்களின் 7,000 தொகுதிகளில் இருந்து 25,000 குடிமக்கள் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.
டக்ஜ்வ்க்ன்
ஸ்ரீநகரில் இருந்து திருநெல்வேலி வரை அனைத்து வகை மண்ணும் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது
இந்த 25,000 பேரும் தங்களது வீடுகளில் இருக்கும் மண்ணை ஒரு கலச பானையில் டெல்லிக்கு எடுத்து சென்றுள்ளனர்.
புது டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே கட்டப்பட இருக்கும் புதிய நினைவுச் சின்னமான 'அம்ரித் வாடிகா' என்ற இடத்தில் அவர்கள் எடுத்து சென்றிருக்கும் மண் கொட்டப்படும்.
ஸ்ரீநகரில் இருந்து திருநெல்வேலி வரை மற்றும் சிக்கிம் முதல் சூரத் வரை, இந்தியாவில் உள்ள அனைத்து வகை மண்ணும் டெல்லில் ஒன்றிணையப்போகிறது.
அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் இந்த நினைவு சின்னம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரமாண்ட விதானம் மற்றும் தேசிய போர் நினைவுச்சின்னத்தின் கீழ் நேதாஜி போஸ் சிலைக்கு அருகில் இந்த புதிய நினைவு சின்னம் அமைக்கப்பட இருக்கிறது.