
"நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
புதுயுக டிஜிட்டல் மீடியாக்களில் டீப்ஃபேக்குகளின் அச்சுறுத்தல்களை சுட்டி காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதால்,
அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற 'தீபாவளி மிலன்' நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, டிஜிட்டல் மீடியாவில் டீப்ஃபேக்குகளின் ஆபத்துகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
மேலும் அவர், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, தனிநபர்களை தவறாக சித்தரித்து பரப்பப்படும் செய்திகளால் ஏற்படும், எதிர்மறை விளைவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல பத்திரிகையாளர்களை வலியுறுத்தினார்.
2nd card
டீப்ஃபேக் என்றால் என்ன?
"நான் சமீபத்தில், நான் கர்பா பாடல் பாடும் வீடியோவை பார்த்தேன். அதுபோன்று இன்னும் பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன" எனக் கூறிய பிரதமர் மோடி, டீப்ஃபேக்கின் அச்சுறுத்தல் பெரும் கவலையாக மாறி உள்ளதாகவும், நம் அனைவருக்கும் நிறைய பிரச்சனைகளை உருவாக்கலாம் எனவும் கூறினார்.
டீப்ஃபேக் என்பது உள்நோக்கத்துடன் போலி தகவல்களை பரப்புவதற்காகவும், தீங்கிழைக்கும் நோக்கத்திற்காகவும் உருவாக்கப்படுகிறது.
அது மக்களை துன்புறுத்த, மிரட்ட, இழிவுபடுத்த, புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
மேலும், டீப்ஃபேக் முக்கியமான செய்திகளை பற்றிய தவறான தகவல்களையும் குழப்பத்தையும் உருவாக்கலாம்.
டீப்ஃபேக் வீடியோக்களை பரப்புபவர்களுக்கு, 3 வருட சிறை தண்டனையும், ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3rd card
டெல்லி பாஜக தலைமையகத்தில் தீபாவளி கொண்டாட்டம்
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்து வருவதாகவும்,
முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியா என்பது பெயரளவில் இல்லாமல், எதார்த்தத்தை அடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
"நாம் இப்போது உலக அளவில் வலுவான இடத்தில் உள்ளோம். உலகம் நமது சாதனைகளை ஒப்புக்கொள்கிறது" என்றார்.
பாரதிய ஜனதா சார்பில் டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவிற்கு, பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.