Loading...
சுதந்திரப் போராட்ட வீரர் லிஸ்ட்டில் பிரதமரின் வாசகம்? வைரலாகும் 'Main Bhi Chowkidar' பக்கம்; சர்ச்சை பின்னணி
சுதந்திரப் போராட்ட வீரர் லிஸ்ட்டில் பிரதமரின் வாசகம் இடம்பெற்று சர்ச்சை

சுதந்திரப் போராட்ட வீரர் லிஸ்ட்டில் பிரதமரின் வாசகம்? வைரலாகும் 'Main Bhi Chowkidar' பக்கம்; சர்ச்சை பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2026
04:35 pm

செய்தி முன்னோட்டம்

X சமூக வலைதளத்தில் அண்மையில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் உள்ள பாடப்புத்தகப் பக்கத்தில், 'Chapter 56: Freedom Fighter Quotes and Slogans' (சுதந்திர போராட்ட வீரர்களின் மேற்கோள்கள் மற்றும் முழக்கங்கள்) என்ற தலைப்பிற்கு கீழ், இந்தியாவின் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வாசகங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார வாசகமான "Main Bhi Chowkidar" என்ற தொடரும் இடம்பெற்றுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பாடப் புத்தகம்

பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கியத் தலைவர்களின் விவரங்கள்

அந்த குறிப்பிட்ட பக்கத்தில் மகாத்மா காந்தி, பகத் சிங் போன்ற வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர போராட்ட தியாகிகளின் முழக்கங்களுடன், சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியல் தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் பி.வி. நரசிம்ம ராவ் ஆகியோரின் முக்கிய வாசகங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதில் நரேந்திர மோடியின் "மை பி சௌகிதார்" என்ற வாசகமும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பின்னணி

அரசுப் பாடப்புத்தகமா? பரவும் செய்தியின் பின்னணியில் உள்ள உண்மை

வைரலாகும் இந்தப் பக்கம் மத்திய அரசின் என்சிஇஆர்டி அமைப்பாலோ அல்லது எந்தவொரு மாநிலக் கல்வி வாரியத்தாலோ வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ பாடப்புத்தகம் அல்ல.

அச்சிடப்பட்ட அப்பக்கத்தின் அடிப்பகுதியில் "SHIVANT SIR" என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.

இது போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி மையம் ஒன்றால் தயாரிக்கப்பட்ட 'Static GK' என்ற பொது அறிவுப் போட்டித் தேர்வுக்கான குறிப்புப் புத்தகமாகும்.

ADVERTISEMENT

இருவேறு கருத்துகள்

சமூக வலைதளங்களில் எழும் இருவேறு கருத்துகள்

இந்தப் பதிவு வெளியானது முதல் எக்ஸ் தளத்தில் பலதரப்பட்ட கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

ஒருதரப்பினர் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் அரசியல் முழக்கங்களை இணைத்து வரலாற்றை மாற்ற முயல்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

மற்றொரு தரப்பினர், "இது அரசு வெளியிட்ட பாடப்புத்தகம் அல்ல; தனியார் பயிற்சி மையம் தயாரித்த பொது அறிவுப் புத்தகம்.

இதில் பிழைகள் இருந்தால் அதற்கு புத்தகப் பதிப்பகமே பொறுப்பேற்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தைக் குறை கூறக் கூடாது" என்று சுட்டிக்காட்டி விவாதித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT