NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி
    மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி

    குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    11:27 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா கிளம்பினார்.

    அங்கு அவர் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடக்கும் நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

    குவாட் உச்சி மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அவரது சொந்த ஊரான வில்மிங்டனில் நடத்துகிறார்.

    குவாட் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கியது.

    குவாட் உச்சி மாநாடு உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள், கடல்சார் பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஒரு லட்சிய புற்றுநோயை எதிர்த்துப் போராடும் முன்முயற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த குவாட் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது குறிப்பிடத்தக்கது.

    ஐநா சபை

    ஐநா சபையில் பிரதமர் மோடி உரை

    உச்சிமாநாட்டின் போது பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தும் பிரதமர் மோடி, பரஸ்பர நலன்கள் குறித்து விவாதிப்பார்.

    இதைத் தொடர்ந்து செப்டம்பர் 23 ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், பல உலகத் தலைவர்கள் பங்கேற்கும் எதிர்காலத்திற்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் ஆகிய அதிநவீன பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக, அவர் செப்டம்பர் 22 அன்று நியூயார்க்கில் இருக்கும்போது இந்திய சமூகத்துடனும், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனும் உரையாட உள்ளார் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    அமெரிக்கா
    ஐநா சபை

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியின் 11வது சுதந்திர தின உரை; ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் ஒலிம்பிக் வரை; முக்கிய அம்சங்கள் சுதந்திர தினம்
    பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய முகமது யூனுஸ்; பங்களாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் பங்களாதேஷ்
    ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தி; இந்தியா கொண்டுவர பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் கடிதம் இந்தியா
    இந்தியாவின் தவப்புதல்வன் கலைஞர் கருணாநிதி; பிரதமர் மோடி புகழாரம் கலைஞர் கருணாநிதி

    அமெரிக்கா

    புதுமையான தீர்வுகளில் உலக தலைவராக உயர்ந்துள்ளது இந்தியா; பில் கேட்ஸ் புகழாரம் பில் கேட்ஸ்
    என்ஜின்கள் தீப்பிடித்தல் புகார்; காவல்துறைக்கு விற்ற 85,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு ஃபோர்டு
    விபத்து காலங்களில் இரத்தப்போக்கினை நொடிகளில் நிறுத்தக்கூடிய ஜெல்: FDA அங்கீகரிப்பு விபத்து
    டிரம்பின் அமைச்சரவையில் பணிபுரிய தயாராகும் எலான் மஸ்க்..ஆனால் இந்த அமைச்சரவை தான் வேண்டும் எலான் மஸ்க்

    ஐநா சபை

    ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளன- ஐநா இஸ்ரேல்
    தாக்குதலை நிறுத்தக் கோரிய ஐநாவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்: ஐநா பொதுச் செயலாளரை பதிவி விலகவும் கோரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025