NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

    இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 25, 2024
    11:14 am

    செய்தி முன்னோட்டம்

    குஜராத்தின் துவாரகாவில் இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

    ஓகா மற்றும் பெய்ட் துவாரகா தீவை இணைக்கும் 'சுதர்ஷன் சேது' ரூ.979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

    2.3 கிமீ நீளமுள்ள அந்த பாலத்திற்கு 2017 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    இது பழைய மற்றும் புதிய துவாரகாவை இணைக்கும் என்று பிரதமர் அப்போது கூறினார்.

    நான்கு வழிச்சாலை 27.20 மீட்டர் அகலமுள்ள பாலத்தில் ஒவ்வொரு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன," என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

    சுதர்சன் சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை மற்றும் இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் அதில் உள்ளன.

    இந்தியா

    இன்று திறந்து வைக்க இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் 

    'சிக்னேச்சர் பாலம்' என்று அழைக்கப்பட்ட இந்த பாலம், 'சுதர்சன் சேது' அல்லது சுதர்சன் பாலம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.

    பேய்ட் துவாரகா என்பது ஓகா துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஒரு தீவு ஆகும்.

    இது துவாரகா நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிமீ தொலைவில் உள்ளது, அங்கு புகழ்பெற்ற கிருஷ்ணர் துவாரகாதீஷ் கோவிலும் அமைந்துள்ளது.

    இன்று பாலத்தை திறப்பதற்கு முன் துவாரகாதீஷ் கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

    குஜராத்தின் முதல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை(எய்ம்ஸ்) பிரதமர் இன்று மதியம் ராஜ்கோட்டில் திறந்து வைக்க இருக்கிறார்.

    ராஜ்கோட் எய்ம்ஸ் தவிர, ஆந்திரா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நான்கு எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் இன்று பிரதமர் திறந்து வைக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது  ரஷ்யா
    இந்தியாவில் மேலும் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு  மாலத்தீவு
    இந்தியாவில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    பிரதமர் மோடி

    அனைவருக்கும் 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்: பிரதமர் மோடியின் புத்தாண்டு வாழ்த்து  இந்தியா
    திருச்சியில் பிரதமர் மோடி: ரூ.20,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்கம்  திருச்சி
    திருச்சி சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  திருச்சி
    சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி விஜயகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025