Page Loader
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி

எழுதியவர் Sindhuja SM
Feb 13, 2024
05:28 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். இது அந்த வளைகுடா நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் ஏழாவது பயணமாகும். அவர் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் கலந்துரையாடி, தற்போதைய மூலோபாய கூட்டாண்மை குறித்து இன்று விவாதித்தார். இன்று அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதோடு, அவரை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கட்டித்தழுவி வரவேற்றார். இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவரின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 14ஆம் தேதி துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உலகத் தலைவர்களுடன் உரையாற்ற இருக்கிறார்.

துபாய் 

ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோவிலான BAPS இந்து மந்திரையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அபுதாபியில் ஒரு சமூக நிகழ்ச்சியில் வெளிநாட்டு இந்தியர்களிடம் அவர் உரையாற்ற உள்ளார். அந்த BAPS இந்து மந்திர் 27 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. அபுதாபியின் பட்டத்து இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப்படையின் துணை உச்ச தளபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2015 இல் நன்கொடையாக வழங்கிய 13.5 ஏக்கர் நிலப்பரப்பின் ஒரு பகுதியாக அந்த கோவில் அமைந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், வர்த்தகம், பாதுகாப்பு, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.