LOADING...
அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பண்டிகை: பிரதமர் மோடி தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து
பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பண்டிகை: பிரதமர் மோடி தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து

எழுதியவர் Sekar Chinnappan
Jan 15, 2026
08:59 am

செய்தி முன்னோட்டம்

தமிழர்கள் பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் போற்றும் இந்தத் திருநாள், நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளைப் பிரதிபலிக்கிறது என்றும், இந்தப் பொங்கல் அனைவரது வாழ்விலும் புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தமிழக முதல்வர்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது சமூக ஊடக பதிவில், "புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாளில் தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், "திராவிட மாடல் 2.0வில் இந்த மகிழ்ச்சி பன்மடங்காகும்" என்று குறிப்பிட்ட அவர், "வெல்வோம் ஒன்றாக" என்ற முழக்கத்துடன் தனது வாழ்த்துகளை நிறைவு செய்துள்ளார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

பொங்கல்

பொங்கல் திருநாளின் சிறப்புகள்

தமிழர் பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் பொங்கல் பண்டிகை, உழவர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகளைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்குப் படைப்பது பாரம்பரிய வழக்கமாகும். ஜல்லிக்கட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் எனத் தமிழகம் முழுவதும் இந்த விழா களைகட்டி வருகிறது. பிரதமர் மற்றும் முதல்வர் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் தலைவர்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்தைப் பகிர்ந்துள்ளனர்.

Advertisement