பள்ளி மாணவர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
சகோதரதுவத்தை வெளிப்படுத்தும் நாளான ரக்ஷாபந்தன் வடமாநிலங்களில் மிகவும் பிரபலம். இந்நாளில், பெண்கள், தங்களின் சகோதரர்கள் அனைவருக்கும், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், 'ராக்கி' என்னும் வண்ண கயிறை கட்டி, தங்களது அன்பை வெளிப்படுத்துவர். அதற்கு பரிசாக, ஆண்கள், தங்களை சகோதரர்களாக ஏற்றுக்கொண்ட சகோதரிகளுக்கு, பரிசுகள் வழங்குவது மரபு. அதன் படி, இன்று, பிரதமர் மோடிக்கு பள்ளி குழந்தைகள் சிலர் ராக்கி அணிவித்து இந்த நாளை கொண்டாடியுள்ளனர். இந்நிலையில், சென்ற வாரம், இந்த ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் சகோதரி கமர் மொஹ்சின் ஷேக், டெல்லிக்கு வருகை தர இருக்கிறார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு 'ராக்கி' கட்டி வருகிறார் என நாம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.