Page Loader
பிரதமர் மோடியின் பாகிஸ்தான் சகோதரி: யாரிந்த கமர் மொஹ்சின் ஷேக்?
ராக்கி பண்டிகை இந்த வருடம் ஆகஸ்ட் 30 அல்லது 31ஆம் தேதியில் கொண்டாடப்படும்.

பிரதமர் மோடியின் பாகிஸ்தான் சகோதரி: யாரிந்த கமர் மொஹ்சின் ஷேக்?

எழுதியவர் Sindhuja SM
Aug 22, 2023
05:46 pm

செய்தி முன்னோட்டம்

இந்த ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் சகோதரி கமர் மொஹ்சின் ஷேக், டெல்லிக்கு வருகை தர இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு குடிபுகுந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மொஹ்சின் என்ற பெண், கடந்த 30 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு 'ராக்கி' கட்டி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும், அந்த பெண்மணி தன் கையால் செய்த ராக்கியை சகோதரத்துவத்தை கொண்டாடுவதற்காக பிரதமர் மோடிக்கு கட்டி விடுகிறார். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோதிலிருந்து இந்த சம்பிரதாயத்தை இருவரும் கடைபிடித்து வருகின்றனர். ரக்ஷா பந்தன் என்பது வட இந்தியர்கள் கொண்டாடும் உடன்பிறப்புகளுக்கான பண்டிகையாகும். இந்த பண்டிகையின் போது, சகோதரிகள் தங்கள் சகோதர்களுக்கு 'ராக்கி' கட்டிவிட்டு அவர்களை வாழ்த்துவார்கள்.

பிபிவெஜ்

யாரிந்த கமர் மொஹ்சின் ஷேக்?

ராக்கி பண்டிகை இந்த வருடம் ஆகஸ்ட் 30 அல்லது 31ஆம் தேதியில் கொண்டாடப்படும். இந்நிலையில், இந்த ஆண்டும் பிரதருக்கு தான் ராக்கி கட்ட இருப்பதாக பிரதமர் மோடியின் 'ராக்கி' சகோதரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த கமர் மொஹ்சின் ஷேக்கும் பிரதமர் மோடியும் உடன் பிறந்தவர்கள் இல்லை என்றாலும், இருவருக்கும் இடையில் நல்ல பாச பிணைப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஷேக் 1953இல் பாகிஸ்தானில் பிறந்தார். அவர் ஒரு இந்தியரை மணந்து 1986இல் இந்தியாவுக்கு வந்தார். அவருக்கு இந்தியாவில் குடும்பம் எதுவும் இல்லை என்பதால் அந்த சமயத்தில் அவர் மிகவும் தனிமையாக உணர்ந்திருக்கிறார். இதற்கிடையில், ஒருநாள், குஜராத் முதல்வராக இருந்த மோடியை அவர் சந்தித்தார். அப்போதிலிருந்து இருவரும் பிரிக்க முடியாத அண்னன் தங்கை ஆகிவிட்டனர்.