
இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டார் குடியரசு தலைவர்
செய்தி முன்னோட்டம்
2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு முன்பு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்தி இனிப்புகளை ஊட்டிவிட்டார்.
குடியரசு தலைவர் முர்மு, நிர்மலா சீதாராமனுக்கு ஒரு ஸ்பூனில் இனிப்பு வழங்குவது போன்ற ஒரு புகைப்படத்தை குடியரசு தலைவர் மாளிகை பகிர்ந்துள்ளது.
"மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மாநில அமைச்சர்கள் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரட் மற்றும் ஸ்ரீ பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர்." என்று ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
குடியரசு தலைவர் மாளிகையின் ட்விட்டர் பதிவு
Union Minister of Finance and Corporate Affairs Smt Nirmala Sitharaman along with Ministers of State Dr Bhagwat Kishanrao Karad and Shri Pankaj Chaudhary and senior officials of the Ministry of Finance called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan before presenting the… pic.twitter.com/miwSv8r4dE
— President of India (@rashtrapatibhvn) February 1, 2024