Page Loader
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் 
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் 

எழுதியவர் Nivetha P
Dec 04, 2023
12:36 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருமாறியுள்ளது, இதனால் வடதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டுகிறது. இதனால் சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், மின்துறை உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணிநேரமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று(டிச.,4)அதிகாலை வரை 34 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புயல் காரணமாக பலத்தக்காற்றுடன் கூடிய அதிகனமழை பெய்யும் என்பதாலும், மரங்கள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழும் என்னும் காரணத்தினாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பான இடங்களில் மக்கள் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கு கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் நிவாரண முகாம்களை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை மாநகராட்சி அறிக்கை