Page Loader
மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம் 
மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம்

மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம் 

எழுதியவர் Nivetha P
Apr 27, 2023
04:58 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கலந்ததாக எழுந்த புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டிகளில் தொடர்ந்து மருத்துவ கழிவுகளை கலந்து வருவதாக புகார்கள் பல எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று(ஏப்ரல்.,27) மதுரை மாநகராட்சி நகர அலுவலர் வினோத் குமார் தலைமையில் காலை மதுரையின் பல பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளதா? என்னும் ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது அரசரடி பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மிக ஆபத்தான மருத்துவ கழிவுகள் மாநகராட்சி குப்பை தொட்டியில் போடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவ கழிவுகள் 

கண்டறியப்பட்ட கழிவுகள் பறிமுதல் 

அதன்படி அந்த குப்பைத்தொட்டியில் ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட ரத்தம் கசிந்துருக்கக்கூடிய சிரஞ்சுகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய பஞ்சுகள், மருத்துவமனை நோயாளிகளின் விவரங்கள், பில்கள் போன்ற பொருட்கள் போடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்து பேசிய மதுரை மாநகராட்சி நகர அலுவலர் வினோத் குமார், மருத்துவ கழிவுகள் இவ்வாறு குப்பை தொட்டியில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியினை அளிக்கிறது. இங்கு கண்டறியப்பட்ட கழிவுகளை பறிமுதல் செய்து சென்னை மாநகராட்சி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அபராதம் விதித்துள்ளனர். இந்த கழிவுகளை தூய்மைப்பணியாளர்கள் எடுக்கையில் அவர்களுக்கு சிரஞ்சி குற்றி நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.