Page Loader
விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
"தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக"விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்

எழுதியவர் Sindhuja SM
Jan 20, 2023
06:02 pm

செய்தி முன்னோட்டம்

விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இன்று(ஜன:20) சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்(DGCA) ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 'ஏர் இந்தியா' விமான சேவை இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்த விமானத்தின் பொறுப்பாளரான விமானியின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. "தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக" ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக DGCA கூறியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவத்திற்காக பயணி சங்கர் மிஸ்ராவுக்கு நான்கு மாதங்கள் விமானத்தில் பறக்க நேற்று இந்த விமான நிறுவனம் தடை விதித்தது.

DGCA

என்ன நடந்தது?

முன்னதாக அவருக்கு விதிக்கப்பட்ட 30 நாள் தடையுடன் இந்த 3 மாத தடையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஜனவரி 4 ஆம் தேதிதான் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின்(DGCA) கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு ஜனவரி 4ஆம் தேதி தான் 'ஏர் இந்தியா' நிறுவனம் போலீஸில் புகார் அளித்தது. பிரச்சனையை இரு தரப்பினரும் பேசி சமாதானம் செய்து கொண்டனர் என்று நினைத்ததாக 'ஏர் இந்தியா' இதற்கு பதிலளித்திருந்தது. புகாரளித்து இரண்டு நாட்களில் தலைமறைவாக இருந்த பயணி சங்கர் மிஸ்ரா பெங்களூருரில் வைத்து கைது செய்யப்பட்டார்.