Page Loader
இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது
மூன்று நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது

இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது

எழுதியவர் Venkatalakshmi V
Sep 20, 2024
11:51 am

செய்தி முன்னோட்டம்

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ். விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் (www.passportindia.gov.in) இன்று இரவு 8 மணி முதல் வரும் 23ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு இந்த 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, விண்ணப்பதாரர்கள் அப்பாயிண்ட்மெட்/ கேள்விகளுக்கு திட்டமிடப்பட்ட பராமரிப்புக்குப் பிறகு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாத இறுதியிலும் பாஸ்போர்ட் சேவைகள் மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post