பாலஸ்தீன ஆதரவு பதிவை லைக் செய்ததால் மும்பை பள்ளி முதல்வர் பதவிநீக்கம்
மும்பையில் உள்ள சோமையா பள்ளியின் முதல்வர் பர்வீன் ஷேக், சமூக வலைதளங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பதிவை லைக் செய்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அது போன்ற பதிவுகளை அவர் லைக் செய்ததை அடுத்து, "ஹமாஸ் ஆதரவு, இஸ்லாமியர் மற்றும் இந்து எதிர்ப்பு" கருத்துக்களை பர்வீன் ஷேக் ஆதரிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பர்வீன் ஷேக்கின் தனிப்பட்ட சமூக ஊடக செயல்பாடுகள் எங்களது மதிப்புகளுக்கு முரணாக உள்ளது. எனவே, கவலைகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை கவனமாக பரிசீலித்த பிறகு அவரை பணிநீக்கம் செய்துள்ளோம் என்று அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பர்வீன் ஷேக்கை பற்றிய சில விஷயங்கள்
பர்வீன் ஷேக் சோமையா பள்ளியில் சுமார் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். ஏழு ஆண்டுகளுக்கு முன் அவர் முதல்வராக பொறுப்பேற்றார். பர்வீன் ஷேக்கின் LinkedIn சுயவிவரத்தின்படி, அவர் கல்வித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் ஆவர். புதிய மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களுக்கு வழிகாட்டி, சிறந்த ஆசிரியர்கள் ஆக்குவதில் அவர் நிபுணத்துவம் வாய்ந்தவர் ஆவார். பாடத்திட்டங்களை வடிவமைப்பதிலும் பயனுள்ள வகுப்பறை அமைப்பை உருவாக்குவதிலும் அவர் திறமையானவர். கற்பித்தல் தவிர, பர்வீன் ஷேக் பள்ளி தணிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.