
கொண்டாட்டங்களுக்கு தயாரான அறிவாலயம்: திமுக கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை
செய்தி முன்னோட்டம்
2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக திமுகவின் நட்சத்திர வேட்பாளர்களான மு.க.கனிமொழி தூத்துகுடியிலும், மூத்த தலைவரான TR பாலு, ஸ்ரீபெரம்புத்தூரிலும், தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியிலும், தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை பகுதிகளிலும் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி முகத்தை நோக்கி செல்கின்றனர்.
அதேபோல திமுக கூட்டணி கட்சிகளும் மற்ற தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால், திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே நேரத்தில், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
திமுக கூட்டணி முன்னிலை
#ElectionResultsWithSunNews | விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி#SunNews | #ElectionResults2024 | #மக்கள்தீர்ப்பு2024 pic.twitter.com/KgesXktv4W
— Sun News (@sunnewstamil) June 4, 2024
ட்விட்டர் அஞ்சல்
திமுக கூட்டணி முன்னிலை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக முன்னிலை!#UpdateNews | #TamilNadu | #Puducherry | #ElectionResults | #LoksabhaElections2024 | #BJP | #DMK | #Congress | #NTK | #VoteCounting | #AIADMK | #LokSabhaElectionResults2024 | #TamilNews | #UpdateNews360 pic.twitter.com/a1klW9xpuE
— UpdateNews360Tamil (@updatenewstamil) June 4, 2024