LOADING...
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு? அத்துமீறி உள்ளே நுழைந்த நபர் கைது
நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு? அத்துமீறி உள்ளே நுழைந்த நபர் கைது

எழுதியவர் Sekar Chinnappan
Aug 22, 2025
11:25 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிகவும் பாதுகாக்கப்பட்ட வளாகங்களில் ஒன்றான நாடாளுமன்ற வளாகத்தில், அடையாளம் தெரியாத ஒருவர் சுவர் ஏறி குதித்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை அத்துமீறலில் ஈடுபட்டார். அதிகாலை 6:30 மணியளவில் ரயில் பவன் அருகே உள்ள ஒரு மரத்தின் உதவியுடன் மதில் சுவரை ஏறி குதித்து, புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தின் கருடா வாயிலை அடைந்த அந்த நபர், பாதுகாப்பாளர்களால் உடனடியாக பிடிக்கப்பட்டார். இந்த அத்துமீறல், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த ஒரு நாள் கழித்து நடந்துள்ளது. இந்த சம்பவம், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

முந்தைய சம்பவம்

நாடாளுமன்றத்தில் இதுபோன்ற சம்பவம் முதல் முறையல்ல

சமீப ஆண்டுகளில் இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, ஒரு 20 வயது மதிக்கத்தக்க நபர் சுவர் ஏறி குதித்து நாடாளுமன்ற இணைப்பு கட்டிட வளாகத்தில் நுழைந்தார். மேலும், 2023 இல், இரண்டு இளைஞர்கள் பார்வையாளர் கேலரியில் இருந்து மக்களவைக்குள் குதித்து, மஞ்சள் புகையை வெளியேற்றி, கோஷமிட்டனர். இந்த சம்பவங்கள் நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடந்த அத்துமீறல் தொடர்பாக முழு அளவிலான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிப்பு அல்லது பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.