Loading...
"7,000 நிமிட அமளி, ரூ.175 கோடி வீண்!" நாடாளுமன்ற முடக்கத்தால் அரசுக்கு நேர்ந்த இழப்பு; முழு விபரம்
நாடாளுமன்ற முடக்கத்தால் அரசுக்கு ரூ.175 கோடி இழப்பு

"7,000 நிமிட அமளி, ரூ.175 கோடி வீண்!" நாடாளுமன்ற முடக்கத்தால் அரசுக்கு நேர்ந்த இழப்பு; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 13, 2026
08:13 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 20 முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கங்கள் மற்றும் வெளிநடப்புகளால் பெருமளவிலான நேரம் வீணடிக்கப்பட்டது. கிடைக்கும் புள்ளிவிவரங்களின்படி, இக்கூட்டத்தொடரில் மட்டும் நாடாளுமன்றத்தின் 7,023 நிமிட பணி நேரம் முடங்கியுள்ளது. மக்களவை இயங்க ஒரு நிமிடத்திற்கு சுமார் ரூ.2.5 லட்சம் செலவிடப்படும் நிலையில், இந்த முடக்கத்தின் காரணமாக அரசு கருவூலத்திற்குச் சுமார் ரூ.175 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

முடக்கம்

கடந்த காலங்களில் முடங்கிய முக்கியக் கூட்டத்தொடர்கள்

நாடாளுமன்ற நேரம் வீணாவது இது முதன்முறையல்ல.

கடந்த சில தசாப்தங்களாகவே அரசியல் எதிர்ப்புகளால் பல கூட்டத்தொடர்கள் முடங்கியுள்ளன.

1980களில் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் முதல், 2010 குளிர்காலக் கூட்டத்தொடரின் 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சை வரை பெரும் அமளிகள் நிலவின.

2012இல் காமன்வெல்த் விளையாட்டு மற்றும் லோக்பால் மசோதா சர்ச்சையால் திட்டமிடப்பட்ட 60 மணி நேரத்தில் வெறும் 23 மணி நேரம் மட்டுமே அவைகள் இயங்கின.

2015

பணமதிப்பிழப்பு மற்றும் ரஃபேல் விவகாரங்கள்

2015இல் வியாபம் ஊழலாலும், 2016 குளிர்காலக் கூட்டத்தொடரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களாலும் 92 மணி நேர மக்களவைப் பணி நேரம் இழக்கப்பட்டது.

அதேபோல 2018இல் வங்கி ஊழல்கள், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மற்றும் ரஃபேல் போர் விமான ஒப்பந்த சர்ச்சைகள் அவையை நிலைகுலைய செய்தன.

அக்காலகட்டத்தில் 15% பணிகள் மட்டுமே நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தற்போதைய சூழல்

மணிப்பூர் வன்முறை மற்றும் தற்போதைய சூழல்

சமீபத்தில் 2023 ஆம் ஆண்டின் மழைக்காலக் கூட்டத்தொடரிலும் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் முடங்கின.

தற்போது 2026 மழைக்காலக் கூட்டத்தொடரிலும் இதே போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நேரம் மற்றும் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT