பரந்தூர் விமான நிலையம்: இடத்தை மாற்ற தமிழக அரசு இன்னும் கோரிக்கை வைக்கவில்லை என மாநிலங்களவையில் தகவல்
செய்தி முன்னோட்டம்
சென்னைக்கான இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
தகவல்கள்
மத்திய அரசு அளித்த முக்கிய தகவல்கள்
பரந்தூரில் சர்வதேச பசுமை விமான நிலையம் அமைப்பதற்காகத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு (TIDCO) மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2025 ஏப்ரல் மாதத்தில் கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.
செப்டம்பர் 2024-ல் டிட்கோ சமர்ப்பித்த விண்ணப்பத்தின்படி, இந்த விமான நிலையத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கான தோராயச் செலவு ₹10,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல், நிதி திரட்டுதல் மற்றும் சுற்றுச்சூழல் விலக்கு சான்றிதழ்களை பெறுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் சம்பந்தப்பட்ட விமான நிலைய உருவாக்குநர் மற்றும் மாநில அரசின் பொறுப்பாகும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The Union Ministry of Civil Aviation’s reply to Honourable MP @PWilsonDMK in the Rajya Sabha confirms that the Government of India granted ‘In-Principle’ approval for the #Parandur Greenfield International #Airport on 07.04.2025, based on TIDCO’s proposal.
— Dr. T R B Rajaa (@TRBRajaa) July 21, 2026
This is yet another… pic.twitter.com/FRREpjAzM2
நிலுவை
நிலுவையில் உள்ள நிலக் கையகப்படுத்தும் பணி
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமப்புற மக்களும் விவசாயிகளும், விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனக் கூறித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது நிலக் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள போதிலும், திட்டத்தை ரத்து செய்வதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.