
சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நாளை(ஆகஸ்ட் 15) இந்தியாவில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பயங்கரவாத அமைப்புகள் முக்கியமாக டெல்லியை குறிவைக்கின்றன என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து, டெல்லியில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய பொது இடங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகளுக்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் தகவல் கிடைத்தது.
டக்க்ள்
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு வரும் அச்சுறுத்தல்கள்
கடந்த மே மாதம், LeTயை சேர்ந்த பயங்கரவாதிகள், டெல்லியில் உள்ள சில முக்கிய சாலைகள், ரயில்வே நிறுவனங்கள், டெல்லி காவல்துறையின் அலுவலகங்கள் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) தலைமையகம் உட்பட சில இடங்களை உளவு பார்த்ததாக நம்பப்படுகிறது.
கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு ஆர்வலர், டெல்லி உட்பட சில இந்திய நகரங்களை குறிவைக்க JEM திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் உலகளாவிய ஜிஹாதி அமைப்புகளிடமிருந்து சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.
இதனையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, நகரில் ரோந்து மற்றும் வாகனச் சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.