இந்தியாவில் ஒரே நாளில் 7,946 கொரோனா பாதிப்பு: 16 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப்-10) 5,676ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 7,946ஆக உயர்ந்துள்ளது. 223 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டின் செயலில் உள்ள கொரோனா 40,215 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.09 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,76,002) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,016 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 16 இறப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லி, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தலா இரண்டு உயிரிழப்புகளும், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா ஒரு உயிரிழப்பும், கேரளாவில் 5 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா உயர்வு கேரளாவில் காணப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,42,04,771ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 4,692 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 6.91 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 3.67 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.72 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,14,242 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,24,326 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 441 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.