தேர்தலில் நவீன நடைமுறைகளை கொண்டுவர பதவியிலிருந்து ஓய்வுபெறும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொலைதூர வாக்களிப்பு, வாக்களிப்பதற்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையைத் தடுக்க வாக்குச்சாவடி வாரியான வாக்கு எண்ணிக்கையை வெளியிடாமல் இருத்தல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என்றார்.
ராஜீவ் குமார் தனது பிரியாவிடை உரையில், தேர்தல் நிதியளிப்பில் நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களுக்கு எதிர்த்து வலுவான நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்தினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பு குறித்து பேசுகையில் தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்க உதவும் வழிமுறைகளை விரைவாக செயல்படுத்துமாறு அவர் மத்திய அரசை வலியுறுத்தினார்.
நடைமுறை
தற்போதைய நடைமுறை
வெளிநாடு வாழ் இந்தியர்கள், தற்போதைய நடைமுறைப்படி தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்றால் அவர்கள் வாக்குப்பதிவின்போது இந்தியாவில் இருக்க வேண்டும்.
இந்த நடைமுறையில்தான் மாற்றம் வேண்டும் என்று ராஜீவ் குமார் வலியுறுத்துகிறார். இந்திய தேர்தல் ஆணையம் இதற்காக பல்வேறு தீர்வுகளை முன்மொழிந்துள்ளது.
ஆனால், அரசியல் கருத்து வேறுபாடுகள் இந்த தீர்வுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல முடியவில்லை.
இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்த விமர்சனங்களை நிராகரித்த ராஜீவ் குமார், குறிப்பாக ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் சமீபத்திய தேர்தல்களின் போது, எதிர்க்கட்சிகள் வாக்களிப்பு போக்குகள் மற்றும் முடிவுகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியதை நிராகரித்தார்.
விமர்சகர்கள் வாக்குப்பதிவு மற்றும் எண்ணும் காலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த தவறான தகவல்களைப் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தொழில்நுட்பம்
தேர்தலில் தொழில்நுட்பம்
தேர்தல்களில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய ராஜீவ் குமார், வாக்காளர் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கொண்டுவர வேண்டும் எனக் கூறினார்.
தனிப்பட்ட வாக்குச்சாவடி தரவு வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை மற்றும் அரசியல் விலக்கைத் தடுப்பதற்கும் டோட்டலைசர் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதை அவர் ஆதரித்தார்.
இதற்கிடையே, ராஜீவ் குமாருக்கு பிறகு புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு விரைவில் கூட உள்ளது.
புதிய தலைவர் 2026இல் நடைபெறவிருக்கும் தமிழகம், பீகார், மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாமில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை மேற்பார்வையிடுவார்.