Page Loader
தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2023
10:11 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் இந்தாண்டு வழக்கத்தினை விட வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு