சட்டப்பேரவையில் ஓபிஎஸின் இருக்கை மாற்றம்
தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்வதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சபாநாயகரிடம், இருக்கை மாற்றல் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சபாநாயகரின் அறிவுறுத்தலின் பேரில் ஓ.பன்னீர் செல்வத்தின் வேறு இடத்திற்கு இருக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்திற்கு, இரண்டாவது வரிசையில், முன்னாள் பேரவை தலைவர் தனபாலுக்கு அருகே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அருகே, முன்னாள் அமைச்சர் ஆர்,பி. உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டார்.