பலத்தை நிரூபிக்க ராமநாதபுரத்தில் நானே போட்டியிடுகிறேன்: ஓ.பி.எஸ். அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில், தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணிக்கு தான் முழுமையாக ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க, சுயேச்சை சின்னத்தில் தானே போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அதிமுகவின் சின்னம், கொடி போன்றவற்றை OPS அணி பயன்படுத்த நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது, OPS அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது.
அதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் சற்று இழுபறி நிலையிருந்தது.
இந்த நிலையில், நேற்று OPS செய்தியாளர்களை சந்தித்து தனது முடிவை தெரிவித்தார்.
மறுபுறம், தமிழகத்தில் உள்ள பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பான அறிக்கையும், பாஜக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலும் வெளியானது.
ட்விட்டர் அஞ்சல்
சுயேச்சையாக களமிறங்கும் ஓபிஎஸ்
#BREAKING | ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறேன் - ஓபிஎஸ் #OPS | #OPanneerselvam | #BJP | #Ramanathapuram | #LokSabhaElections2024 pic.twitter.com/PE8hlJhGWk
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 21, 2024