Page Loader
தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம்
மாநகராட்சியாக தரம் உயர்கிறது ஊட்டி

தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 30, 2024
11:17 am

செய்தி முன்னோட்டம்

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளில் உள்ள பிரதிநிதிகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நாமக்கல், திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தேனி, சிவகங்களை ஆகிய 17 மாவட்டங்களில் உள்ள பல்வேறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்போது, அருகிலுள்ள ஊராட்சிகளும் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரி

ஊட்டி மாநகராட்சி

இதேபோல் நீலகிரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் ஊட்டியையும் மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும்போது, அருகிலுள்ள கேத்தி பேரூராட்சியும், தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார் மற்றும் உல்லத்தி ஆகிய ஊராட்சிகளும் ஊட்டி மாநகராட்சியுடன் இணைக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. டிசம்பரில் ஊராட்சிகளின் பதவிக்காலம் காலாவதியாகும் நிலையில், அதற்கு முன்னர் அல்லது 2025 ஜனவரியில் தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் முடிந்த பின்னரே ஊராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், உள்கட்டமைப்புகள் அதிகரித்து சுற்றுச்சூழல் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சூழலியல் ஆர்வலர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

புதிய நகராட்சிகளை உருவாக்க பரிந்துரை