ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்
செய்தி முன்னோட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதில் மிகமுக்கியமான ஒன்று தான் இந்த ரோஜா கண்காட்சி ஆகும்.
அதன்படி, நாளை(மே.,13) முதல் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதற்காக இந்த ரோஜா தோட்டமானது பராமரிக்கப்பட்டு அதில் மலர்கள் அதிகளவில் பூத்து குலுங்குகிறது.
இந்த ரோஜா கண்காட்சியினை முன்னிட்டு பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்ய தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது என்று தெரிகிறது.
வருடாவருடம் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும் நிலையில், 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொன்டு இம்முறை பிரம்மாண்ட ஈபிள் டவர் அமைப்படவுள்ளது.
சுற்றுலா
நீலகிரியில் மே 19ம் தேதி உள்ளூர் விடுமுறை
இதனை தொடர்ந்து 30 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஊட்டி 200, யானைகள், டென்னிஸ் பேட், மஞ்சப்பை, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத்துறையினர் இப்பணிகளை செய்து வருகிறார்கள்.
ரோஜா மலர்களை கொண்டு பல வகை சிறிய அலங்காரங்கள், ரங்கோலி போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.
ரோஜா கண்காட்சி நாளை துவங்கவுள்ள நிலையில், தற்போது ரோஜா பூங்காவை பொழிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் ஊட்டி மலர் கண்காட்சியினை முன்னிட்டு மே 19ம் தேதி உள்ளூர் விடுமுறை ஊட்டியில் 125வது மலர் கண்காட்சி துவங்குவதை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மாற்றாக ஜூன் 3ம் தேதி பணி நாளாக இயங்கும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.