Page Loader
வீடியோ: தன்னுடன் சண்டையிட்ட பெண்ணை காரை விட்டு ஏற்றி கொன்ற நபர் தப்பி ஓட்டம்

வீடியோ: தன்னுடன் சண்டையிட்ட பெண்ணை காரை விட்டு ஏற்றி கொன்ற நபர் தப்பி ஓட்டம்

எழுதியவர் Sindhuja SM
Dec 27, 2023
02:22 pm

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இரவு கிளப்பில் ஏற்பட்ட சன்டையை அடுத்து, உமா சுதர் என்ற பெண்ணை ஒருவர் காரை விட்டு ஏற்றி கொன்றிருக்கிறார். அந்த விபத்தில் மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமா சுதர் என்ற பெண், ஜெய்ப்பூரில் வசித்து கொண்டே வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இரவு கிளப்பிற்கு சென்ற போது, அவருக்கும் மங்கேஷ் என்பருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் அந்த இரவு கிளப்பை விட்டு வெளியேறியதும் வெளியே காத்து கொண்டிருந்த மங்கேஷ், தனது காரை வைத்து உமா சுதரை ஏற்றி கொன்றுவிட்டு தப்பி ஓடினார். மங்கேஷை பிடிக்க தற்போது போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் சிசிடிவி காட்சி