Page Loader
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு
J-K மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக ஒமர் அப்துல்லா தேர்வு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 10, 2024
04:55 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாட்டுக் கட்சியின் (NC) தலைவர் ஃபரூக் அப்துல்லா, தனது மகன் ஒமர் அப்துல்லா, சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வியாழக்கிழமை அறிவித்தார். இந்த முடிவு மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான NC யின் முதல்வர் வேட்பாளராக ஒமர் ஆகிறார். ஸ்ரீநகரில் உள்ள என்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னதாக NCக்கு ஆதரவாக சுயேட்சைகளில் சிலர் கை கோர்த்துள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் துணையின்றியே NC ஆட்சி அமைக்க பெரும்பான்மையை பெற்றுள்ளது.

கூட்டணி உத்தி

என்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரும்

தற்போது ஒமர் அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடுத்த கட்டமாக, NCயின் கூட்டாளியான காங்கிரஸிடம் இருந்து உமர் ஆதரவு கடிதம் பெறுவார். இந்த ஆதரவுடன், அவர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். என்சி-காங்கிரஸ் கூட்டணியில் 49 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்ட பெயரிடப்படாத NC தலைவர் ஒருவர் KNO செய்தி நிறுவனத்திடம், அவர்கள் சனிக்கிழமைக்குள் தாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டுள்ளதாக கூறினார்.