
ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி!
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் வசிப்பவர்களான ஹரன் கயென் (40), நிஷிகாந்த் கயென் (35) மற்றும் திபாகர் கயென் (32) ஆகியோர் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள். பிழைப்புக்காக தமிழகம் வந்தவர்கள். இடையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் தமிழ்நாடு நோக்கி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் செய்த போது, விதிவசத்தால் மூவருமே இறந்த செய்தி உள்ளூர் வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அவர்கள் இறந்த செய்தியை கேட்டு அவர்களின் குடும்பத்தினர் பெரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஹரனின் மனைவி அனாஜிதா ஒரு நோயாளி. ஹரனின் சம்பாத்தியத்தை கொண்டு நடைபெற்று வந்த அவரது சிகிச்சை, தற்போது என்ன ஆகுமோ எனவும் அவர் குடும்பத்தார் வருந்துகின்றனர்
Odisha Rail Accident
3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி
நிஷிகாந்த்க்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன்,திபாகருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
குடும்பம் பிழைப்பதற்கு வாழ்வாதாரமாக இருந்தவர்கள் இவர்கள் மூவர் மட்டும் தான்.
வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த விபத்தில் பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்களில், ஆறு பேர் பசந்தி தொகுதியைச் சேர்ந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 270 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் பலர் அடையாளம் காணப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.