Page Loader
பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம்
ஆர்.கவிதா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த கருத்தை கூறியுள்ளனர்.

பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம்

எழுதியவர் Sindhuja SM
Nov 12, 2023
06:48 pm

செய்தி முன்னோட்டம்

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். வயதான பெற்றோரின் சொத்துக்களை குழந்தைகள் பரிசாகப் பெற்றுக் கொள்ளும்போது அவர்களைக் கவனித்து கொள்ள வேண்டிய கடமை குழந்தைளுக்கு அதிகமாகிறது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆர்.கவிதா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த கருத்தை கூறியுள்ளனர். கவிதாவின் பெற்றோரான நிர்மலும், ராஜசேகரையாவும் தங்களுக்குச் சொந்தமான சொத்தை தங்கள் மகளுக்கு 2018ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கினர். அந்த பரிசு வழங்கும் போது கையெழுத்தான பரிசுப் பத்திரத்தில் கவிதா தன் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

வ்ஜ்க்ள்

பெற்றோரை துன்புறுத்தியால்  பரிசுப் பத்திரம் ரத்து 

ஆனால், கவிதாவும் அவரது கணவரும் நிர்மல் மற்றும் ராஜசேகரையா ஆகியோரை உடல் ரீதியாக தாக்கி அவர்களை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இதனையடுத்து, கடனை அடைப்பதற்காக நிலத்தை விற்குமாறு கவிதாவும் அவரது கணவரும் தன்னை வற்புறுத்துவதாக கூறி ராஜசேகரையா உதவி ஆணையரிடம் மனு அளித்தார். அந்த மனுவை பெற்ற உதவி ஆணையர்,பரிசுப் பத்திரத்தை ரத்து செய்தார். அதனால், கவிதாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த சொத்துக்கள் திரும்ப பெறப்பட்டன. இந்நிலையில், பரிசுப் பத்திரத்தை ரத்து செய்த உதவி ஆணையரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் கவிதாவும் அவரது கணவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு செப்டம்பர் 10, 2021 அன்று நீதிமன்றத்தால் நிராகரிப்பட்டது.

டவ்ங்கள்

'பெற்றோரைக் கவனித்து கொள்வது சட்டப்பூர்வ கடமை': நீதிபதிகள்

அதனை தொடர்ந்து, கவிதாவும் அவரது கணவரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களது அந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு நேற்று விசாரித்தது. அதை விசாரித்த நீதிபதிகள், துமகுரு மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள பசவபட்டனாவைச் சேர்ந்த ஆர்.கவிதா மற்றும் அவரது கணவர் யோகேஷ் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். "இதற்குமுன் ஒற்றை நீதிபதி வழங்கிய தீர்ப்புடன் நாங்கள் உடன்படுகிறோம். இது குறித்து விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் இந்த மனுவை நிராகரிக்கிறோம். வயதான தந்தையையும் தாயையும் கவனித்துக்கொள்வது தர்மம் செய்வது அல்ல, அது ஒரு சட்டப்பூர்வ கடமையாகும்." என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.