LOADING...
"மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் OBCக்களும் சேர்க்கப்பட வேண்டும்": சோனியா காந்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் OBCக்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

"மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் OBCக்களும் சேர்க்கப்பட வேண்டும்": சோனியா காந்தி

எழுதியவர் Sindhuja SM
Sep 20, 2023
12:32 pm

செய்தி முன்னோட்டம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று ஆதரவு தெரிவித்தார். இன்று நடைபெற்று வரும் இந்த மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்த சோனியா காந்தி, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்தியப் பெண்களுக்குப் பெரும் அநீதியாகும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்துவது அவசியம் மட்டுமல்ல, சாத்தியமான அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும்" என்றார். மேலும், அவர் தனது உரையில், இந்த மசோதாவை முதன்முதலில் தனது கணவரும் மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தான் கொண்டு வந்தார் என்றும் தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் OBCக்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பாபிச்ஜ்

இன்று மக்களவை விவாதத்தில் சோனியா காந்தி கூறியதாவது:

இது எனது சொந்த வாழ்க்கையின் உணர்ச்சிகரமான தருணமாகும். முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை எனது வாழ்க்கைத் துணைவர் ராஜீவ் காந்தி தான் கொண்டு வந்தார். அது ராஜ்யசபாவில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர், பிரதமர் பிவி நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜ்யசபாவில் அந்த மசோதாவை நிறைவேற்றியது. இதன் விளைவாக, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நாடு முழுவதும் 15 லட்சம் பெண் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ராஜீவ் காந்தியின் கனவு ஓரளவு மட்டுமே நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேறியவுடன் அது மொத்தமாக நிறைவேறும். எங்கள் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கிறது, ஆனால் பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டிற்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும்(OBC) இடஒதுக்கீடு வேண்டும்.