
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் பதவிக்காலம் நீட்டிப்பு; பிரதமரின் முதன்மை செயலாளராக PK மிஸ்ரா தொடர்வார்
செய்தி முன்னோட்டம்
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் ஜூன் 10ஆம் தேதி முதல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
நியமனங்களை அறிவிக்கும் மத்திய அரசாங்கத்தின் அறிக்கைகளில்,"பிரதமரின் பதவிக் காலத்துடனோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ, எது முன்னதாகவோ இவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்" என்று கூறியது.
அதாவது நரேந்திர மோடி பிரதமராக தொடரும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்த அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருப்பார்கள்.
அதோடு அஜித் தோவல் மற்றும் PK மிஸ்ரா இருவரும் தங்கள் பதவிக் காலத்தில் முன்னுரிமை அட்டவணையில் கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படுவார்கள் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
அஜித் தோவல் பதவிக்காலம் நீட்டிப்பு
Ajit Doval appointed National Security Advisor for the third consecutive time. #AjitDoval #NSA @PMOIndia pic.twitter.com/Dzw4a7yZUA
— SHAMSHER SINGH (@ShamsherSLive) June 13, 2024