
காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற திருமணமான இந்திய பெண்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த அஞ்சு என்ற திருமணமான பெண் தன் பேஸ்புக் காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ராஜஸ்தானை சேர்ந்த அஞ்சு, தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளோடு பிவாடி மாவட்டத்தில் வசித்து வந்தார்.
அஞ்சுவின் கணவர் அரவிந்த் பிவாடியில் பணிபுரிந்து வருகிறார். அஞ்சு, தனியார் நிறுவனம் ஒன்றில் பயோடேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜெய்ப்பூர் செல்வதாக தன் குடும்பத்தினரிடம் பொய் சொல்லிவிட்டு அஞ்சு பிவாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.
அதன் பிறகு, அவர் தனது பேஸ்புக் நண்பரான நஸ்ருல்லாவை(29) சந்திக்க பாகிஸ்தானுக்கு சென்றார்.
சுஇவ்
நேற்று மாலை 4 மணியளவில் தன் கணவரை தொடர்புகொண்ட அஞ்சு
மருத்துவத் துறையில் பணிபுரியும் நஸ்ருல்லாவும், அஞ்சுவும் சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நண்பர்களானார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
முதலில் அவர் பாகிஸ்தானுக்குள் நுழைந்தவுடன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர், அவரது பயண ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், ஊடங்களின் மூலம் அஞ்சுவின் கணவர் அரவிந்துக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.
அது போக, நேற்று மாலை 4 மணியளவில் தன் கணவரை தொடர்புகொண்ட அஞ்சு, தான் லாகூரில் இருப்பதாகவும், இரண்டு மூன்று நாட்களில் திரும்பி வருவேன் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த், தன் மனைவியின் காதலரை பற்றி கேள்விப்பட்டதாகவும், சீக்கிரமே தன் மனைவி தன்னிடம் திரும்பி வருவாள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.