Page Loader
5 மணிநேரத்திற்கு முன்பே கிளம்பி 35 பயணிகளை விட்டு சென்ற விமானம்
இரவு 7.55 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் மாலை 3 மணிக்கே புறப்பட்டதால் சர்ச்சை

5 மணிநேரத்திற்கு முன்பே கிளம்பி 35 பயணிகளை விட்டு சென்ற விமானம்

எழுதியவர் Sindhuja SM
Jan 20, 2023
05:17 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், பெங்களூரு விமான நிலையத்தில் 55 பயணிகளை விட்டுவிட்டு 'கோ ஃபர்ஸ்ட்' விமானம் பெங்களூரில் இருந்து டெல்லி சென்றது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இது நடந்து சில நாட்களுக்குள், அமிர்தசரஸில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே புறப்பட்டு அமிர்தசரஸ் விமான நிலையத்தில் 35 பயணிகளை விட்டுச் சென்றிருக்கிறது. ஸ்கூட் ஏர்லைன் விமானம் இரவு 7.55 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது புதன்கிழமை(ஜன:18) மாலை 3 மணிக்கே புறப்பட்டது. இதனால் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விட்டு செல்லப்பட்ட 35 பயணிகளும் குழப்பமடைந்தனர். விட்டுச் செல்லப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் பயண வசதிகளை செய்து தருவதாக ஸ்கூட் ஏர்லைன் தெரிவித்திருக்கிறது என்று விமான நிலைய இயக்குனர் வி.கே.சேத் கூறி இருக்கிறார்.

பெங்களூரு

55 பயணிகளை விட்டு சென்ற பெங்களூரு-டெல்லி விமானம்

பயணிகள் விமானத்தை முன்பதிவு செய்த முகவர் நேர மாற்றம் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை, அதுவே இதற்கு காரணம் என்று சேத் கூறியுள்ளார். விமான நேர மாற்றம் குறித்து பயணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) 'கோ ஃபர்ஸ்ட்' ஏர்லைன்ஸின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரிக்கு 55 பயணிகளை விட்டு சென்றதற்காக நோட்டீஸ் அனுப்பி இருந்தது. விமான நிறுவனம் தனது பதிலை DGCAக்கு சமர்பிக்க இரண்டு வார கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் போது, 55 பயணிகளை விமான நிலைய பேருந்திலேயே காக்க வைத்துவிட்டு விமானம் சென்றுவிட்டது. அதன்பின், சுமார் 4 மணிநேரத்திற்கு பிறகு இந்த 55 பயணிகளும் இன்னொரு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.