LOADING...
ட்ரெயின் தட்கல் டிக்கெட்டுகளுக்கு இப்போது ஆதார் அவசியம்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு
ட்ரெயின் தட்கல் டிக்கெட்டுகளுக்கு இப்போது ஆதார் அவசியம்

ட்ரெயின் தட்கல் டிக்கெட்டுகளுக்கு இப்போது ஆதார் அவசியம்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2025
01:07 pm

செய்தி முன்னோட்டம்

தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், டிக்கெட்டுகளை ஒழுங்குபடுத்தவும் ஒரு பெரிய நடவடிக்கையாக, இந்திய ரயில்வே விரைவில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கவுள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த புதிய முறை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக ஊடகங்களில் இதை அறிவித்தார். இந்த முயற்சி உண்மையான பயனர்கள் அவசர காலங்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற உதவும் என்று கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முன்பதிவில் மாற்றம்

தட்கல் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்

தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில், இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் வெளியிட்ட இந்த மாற்றமானது, உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை திறம்பட பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. UIDAI-யின் மத்திய அடையாளத் தரவு களஞ்சியத்தில் மக்கள்தொகை அல்லது பயோமெட்ரிக் விவரங்களுடன் ஆதார் எண்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், டிக்கெட் விண்ணப்பதாரர்களின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படுகிறது. இது மோசடியான முன்பதிவுகளைக் குறைக்கும். இந்த நடவடிக்கை டிக்கெட் முன்பதிவு செயல்முறையை நெறிப்படுத்தும் மற்றும் பயணிகளிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடைமுறை

தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறை

புதிய விதிகளின்படி, தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது ஆதார் அடிப்படையிலான ஓடிபி (OTP) உறுதிப்பாடு கட்டாயமாகும். அதிகாரபூர்வ பிஆர்எஸ் (PRS) கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படும் ஓடிபி (OTP)யை உறுதிப்படுத்திய பின்பே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு வழங்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதாவது ஏசி பெட்டிகளுக்கு காலை 10:30 மணி வரையிலும், நான் ஏசி பெட்டிகளுக்கு காலை 11:30 மணி வரையிலும் முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது.