
வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி
செய்தி முன்னோட்டம்
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: சிவகங்கை-மானாமதுரை அருகேயுள்ள தெக்கூர் என்னும் கிராமத்தில் ஒடிசாவை சேர்ந்தவடமாநில பெண் ஒருவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தபடி அங்கேயே ஓர் குடிசையில் தங்கி வசித்து வந்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது 2 குழந்தைகளை விடுதியில் தங்கவைத்து படிக்க வைக்கிறாராம்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இப்பெண் சூளை வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார்.
அப்போது இப்பெண் தனிமையில் இருப்பதை அறிந்து அக்கிராமத்தினை சேர்ந்த 4 பேர் நள்ளிரவு நேரத்தில் அந்த வடமாநில பெண்ணின் குடிசைக்குள் நுழைந்துள்ளனர்.
இதனிடையே சத்தம் கேட்டு அப்பெண் கண் விழித்து பார்க்கையில் இவர்கள் நான்கு பேரும் நிற்பதை கண்ட அப்பெண் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
க்ரைம்
நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி.
பின்னர் பீதியில் அவர் கூச்சலிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், கஜா, முகேஷ், ரஞ்சித், அருண் உள்ளிட்ட 4 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாளை கையில் எடுத்துள்ளனர்.
'சத்தமிட்டால் இந்த வாளை கொண்டு உன்னை வெட்டி கொன்று விடுவோம்' என்று மிரட்டிய அவர்கள், அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன்பின் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் என்று தெரிகிறது.
அதனையடுத்து அப்பெண் தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அக்கம் பக்கத்தில் கூறியதோடு அவர்களை அழைத்து கொண்டு மானாமதுரை காவல் நிலையம் சென்று இதுகுறித்து புகாரளித்துள்ளார்.
அதன்பேரில் மாவட்ட எஸ்.பி.அரவிந்த் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
அந்த 4 இளைஞர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடி பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.