டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தானியங்கி மதுவிற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனம் மூலம் நிறுவப்பட்டுள்ளது. இதில் தேவையான மதுவகையினை தேர்வுசெய்து, அதற்கான பணத்தினை செலுத்தினால் அந்த இயந்திரத்தில் இருந்து மது பாட்டிலினை பெற்றுக்கொள்ளலாம். 21வயது நிரம்பரியவர்கள் மட்டுமே இந்த இயந்திரத்தில் இருந்து மதுவினை பெறமுடியும் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தானியங்கி இயந்திரத்திற்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இதனை இன்று நேரில்சென்று கண்டு ஆய்வினை மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஅவர், டாஸ்மாக் வருமானத்தினை கொண்டு அரசினை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. திமுக ஆட்சி அமைந்த 2ஆண்டுகளில் இதுவரை 96டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது என்று கூறினார்.
நண்பகல் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே செயல்படும் இயந்திரம்
அதனை தொடர்ந்து பேசிய அவர், ஆனால் சில பத்திரிகைகள் தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனையளிக்கிறது. இந்த தானியங்கி இயந்திரம் பகல் 12 மணிமுதல் இரவு 10வரை மட்டுமே செயல்படும். இதுகுறித்து முழுவதும் அறிந்துகொள்ளாமல் 24 மணிநேரமும் இதனை பயன்படுத்தலாம் போன்ற தவறான செய்திகளை பரப்பவேண்டாம். 29%நாடாளுமன்ற வருகை பதிவு கொண்டவர் இதுகுறித்த செய்திகளை வெளியிடுகிறார். 2019ல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013,2014,2018என நான்கு ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 4டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர், அன்புமணி உட்பட யாரேனும் நாடாளுமன்றத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையினை கொண்டுவர வேண்டியது தானே. அதற்கு தைரியமில்லை, இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.