இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்திற்குள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு
இன்று முதல், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் வசூலிக்க போவதாகவும், காலை 10 மணி-மாலை 6 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்க்கை முறையை எடுத்து கூறும் சான்றாக கீழடி ஆகழ்வாராய்ச்சி தளம் இருந்து வருகிறது. அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை, அருங்காட்சியகமாக காட்சிபடுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. நேற்று வரை, பொதுமக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்குள், இன்று முதல், நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யாவும், அவரது குடும்பத்தாரும், கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று வருகை தந்திருந்தனர். அவரின் வருகையை ஒட்டி, கூட்டத்தினரை கட்டுப்படுத்த, அருங்காட்சியகம் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்களும், மாணவர்களும், நெடு நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.