NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல்
நெய்வேலி கலவரம் தொடர்பாக 28 பாமகவினர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி எடுக்கும் நிறுவனம் 'NLC இந்தியா' தனது 2ஆம் கட்ட சுரங்க விரிவாக்க பணியை கடலூர் மாவட்டம் புவனகிரியில் தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பல உள்ளூர் வாசிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பாமக கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். இந்த முற்றுகை போராட்டம் சிறு நேரத்தில் கலவரமாக மாறியதால், நெய்வேலி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உட்பட 11 காவலர்கள் மற்றும் ஒரு மூதாட்டி ஆகியோர் காயாமடைந்தனர்.
சுரங்க விரிவாக்க பணியை 'NLC இந்தியா' நேற்று நிறுத்தியது
இந்த கலவரத்தின் போது, போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது கலவரத்தில் ஈடுபட்ட 28 பாமகவினர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களில் இருவர் சிறார் என்பதால், அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், கடலூர் மாவட்டத்தில் நடந்து வந்த 2ஆம் கட்ட சுரங்க விரிவாக்க பணியை 'NLC இந்தியா' நேற்று நிறுத்தியது.