NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்
    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்
    இந்தியா

    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    September 15, 2023 | 02:44 pm 1 நிமிட வாசிப்பு
    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்
    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்

    கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், சென்ற வாரத்தில், கேரளாவின் கோழிக்கோட்டில், ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது முதல்முதலில் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இருவர் மரணமடைந்துள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்று கூறப்பட்டது. இன்றைய சுகாதாரத்துறையின் அறிக்கைப்படி, 6 நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 30ம் தேதி உயிரிழந்த இந்த தொற்றின் பாதிப்பால் இறந்த 47 வயது நபரின் வீட்டு தோட்டத்தில், வௌவால்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த தோட்டத்தில் வாழை மரங்கள் நிறைந்து இருப்பதாலும், அவர் வீடு அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே ஒரு அடர்ந்த வானம் இருப்பதாகவும், அங்கேயும் நிறைய வௌவால்கள் இருப்பதாகவும் சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

    வௌவால்கள் மூலம் பரவும் வைரஸ்

    தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வௌவ்வால்களின் எச்சங்கள், மருத்துவ ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன் பின்னரே இந்த தொற்றுக்கான ஆரம்பப்புள்ளி கண்டறியப்படும். மேலே குறிப்பிட்ட அந்த வனத்தில் காணப்பட்ட வௌவ்வால்களிடம் தான் சென்றமுறையும் நிபா வைரஸ் படிமங்கள் காணப்பட்டது என செய்திகள் கூறுகின்றன. பாதிக்கப்பட்ட அந்த நபர், வளைகுடா நாட்டில் கடை நடத்தி வந்ததாகவும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை நோய்வாய்ப்பட்டதால் கேரளாவுக்கு திரும்பியதாகவும் கூறுகிறார்கள். அதன்பின்னர், அவரது தோட்டத்திலேயே விவசாயத்தை பார்த்துக்கொண்டு, இங்கேயே தங்கிவிட்டதாக தெரிகிறது. நிபா வைரஸ், வௌவால்கள் கடித்த பழங்கள் மூலமாகவோ, அவற்றின் எச்சங்களை தொடுவதாலோ பரவுவதால், தற்போது பழ வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஸ்கெட்ச் போட்டு தூக்கும் சுகாதாரத்துறை

    இதற்கிடையில், புதன்கிழமை அன்று, கேரளாவின் சுகாதாரத் துறை பாதிக்கப்பட்ட இருவரின் 'வழி வரைபடங்களை' வெளியிட்டது. அதன்படி, இறந்த நபருக்கு, ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. 23 ஆம் தேதி, அவர் ஒரு குடும்ப விழாவில் கலந்துகொண்டு, 25 ஆம் தேதி வங்கிக்குச் சென்றார். அதே நாளில், அவர் அருகிலுள்ள மசூதியில் பிரார்த்தனை செய்தார். அவர் ஆகஸ்ட் 30 அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன், இரண்டு வெவ்வேறு கிளினிக்குகளுக்குச் சென்றுள்ளார். இதுமட்டுமன்றி, அவர் இறந்தபோது, ​​அது இயற்கை மரணம் என்று நினைத்து பலரும், சிறு வயதிலேயே இறந்துபோனாரே என்ற ஆற்றாமையினாலும், அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தற்போது அவர்கள் அனைவரையும் தனிமை படுத்தியுள்ளது சுகாதாரத்துறை

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    நிபா வைரஸ்
    வைரஸ்
    கேரளா
    கோழிக்கோடு

    நிபா வைரஸ்

    கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர் கோழிக்கோடு
    அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன வைரஸ்
    கேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல்  கோழிக்கோடு
    நிபா வைரஸ் எதிரொலி - கேரளா கோழிக்கோட்டில் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சுகாதாரத் துறை

    வைரஸ்

    தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்  சென்னை
    'இப்படியொரு பேட்டிங்கை பார்த்திருக்கவே மாட்டிங்க! வைரலாகும் சிறுவன் வீடியோ! கிரிக்கெட்
    உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்: அதன் முக்கியத்துவம், காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள் எய்ட்ஸ்
    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு

    கேரளா

    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி  இந்தியா
    இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் - கேரளாவில் திறப்பு சுற்றுலா
    'INDIA' Vs பாஜக: 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  இந்தியா
    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு தமிழ்நாடு

    கோழிக்கோடு

    புதுச்சேரி-மாகே பள்ளி கல்லூரிகளுக்கு செப்.24 வரை விடுமுறை புதுச்சேரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023