பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது
செய்தி முன்னோட்டம்
பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கருதப்படும் நபருடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்ற மாதம், பெங்களூருவில் உள்ள பிரபலமான 'ராமேஸ்வரம் கஃபே' உணவகத்தில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு வெடித்தது.
இதை வெடி விபத்தில், அதிருஷ்டவசமாக உயிரிழப்பு நேரவில்லை என்றாலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கினை தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் நபரின் முகம் அடையாளம் காணப்பட்டது.
எனினும், அந்த நபர் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில்தான், குற்றவாளியுடன் தொடர்பு இருக்கலாம் என கருதப்படும் ஷிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த பாஜக நிர்வாகி சாய் பிரசாத்தை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
embed
பாஜக பிரமுகர் கைது
#JUSTIN | பெங்களூரு குண்டு வெடிப்பு - பாஜக நிர்வாகியிடம் என்ஐஏ விசாரணை#NIA | #BJP | #Bengaluru | #bengalurucafeblast pic.twitter.com/FIm5STark8— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2024