பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் மண்டலத்தலைவர் முகமது கைசர்(50) வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள். இதனை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் முகமது கைசரை அவரது வீட்டில் வைத்து விசாரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளோர் என்னும் சந்தேகத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், தற்போது முகமது கைஸரை கைது செய்த காவல்துறை, அவரை மதுரைக்கு அழைத்து சென்றனர்.
பழனியில் டீ கடை நடத்தி வரும் முகமது கைசர்
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராக உள்ள முகமது கைசர், பழனியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் முகமது கைசர் மற்றும் பழனியை சேர்ந்த சதாம் உசேன்(26) உள்ளிட்ட இருவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் பழனி நகர் காவல் நிலையத்தில் வைத்து 3 நாட்கள் விசாரணை நடத்தியுள்ளார்கள். கோவை மற்றும் கர்நாடகாவில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்தும், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்தும் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.