
தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ்
செய்தி முன்னோட்டம்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(IIT) மெட்ராஸ், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்திய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவின் டாப் 100 நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த 18 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
சிறந்த பல்கலைக்கழகம்
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம்(IISc) சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
பொறியியல் கல்வி நிறுவனங்கள்
பொறியியல் கல்வி நிறுவனங்களில், IIT மெட்ராஸ் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
IIT டெல்லி மற்றும் IIT பாம்பே ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இந்திய கல்லூரிகள்
டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் முதலிடத்தையும், இந்து கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
சென்னை பிரசிடென்சி கல்லூரி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
details
IIT கான்பூர் புதுமைக்கான சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
ஆராய்ச்சி நிறுவனம்
IISc பெங்களூரு ஆராய்ச்சிக்கான சிறந்த நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
மேனேஜ்மென்ட் கல்லூரிகள்
மேலாண்மைக் கல்லூரிகளில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்(IIM), அகமதாபாத் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து IIM பெங்களூர் மற்றும் IIM கோழிக்கோடு ஆகியவை இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.
மருந்தக கல்லூரிகள்
மருந்தக படிப்புகளில், ஹைதராபாத்தில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
ஜாமியா ஹம்தார்ட் மற்றும் பிட்ஸ் பிலானி ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
சட்ட கல்லூரிகள்
பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
டெல்லியின் தேசிய சட்டப் பல்கலைக்கழகமும், ஹைதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகமும் அதற்கு அடுத்த இடங்களை பிடித்துள்ளன.