
திருப்பதி பாதயாத்திரைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இரு தினங்களுக்கு முன்னர், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த லக்ஷிதா என்ற சிறுமி, தனது பெற்றோர்களுடன், திருப்பதி மலையை ஏறியுள்ளார். அவரை, நரசிம்ம சாமி கோவில் அருகே சிறுத்தை ஒன்று அடித்து கொன்றது.
இதனை தொடர்ந்து, பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
அதன்படி, 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரையாக மலையேற அனுமதியில்லை.
மேலும், மலைப்பாதைகளில் பைக்குகளில் காலை 6 மணி-மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படும்.
சிறுத்தை நடமாட்டம் குறைந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பாதயாத்திரைக்கு புதிய கட்டுப்பாடுகள்
#JUSTIN || திருப்பதி மலைப்பாதைகளில் சிறுத்தை நடமாட்டம் - பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்
— Thanthi TV (@ThanthiTV) August 14, 2023
15 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் பாதயாத்திரையாக மலையேறி செல்ல அனுமதி இல்லை
மலைப்பாதைகளில் பைக்குகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி… pic.twitter.com/vTO5Rec7jB