உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது இன்னும் 24 மணிநேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் பின்வருமாறு:
டிசம்பர் 9
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்
ஜேக்க்ஸ
டிசம்பர் 10 மற்றும் டிசம்பர் 11
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
டிசம்பர் 15
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.