Page Loader
ரேஷன் கார்டுகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகம் 
ரேஷன் கார்டுகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகம்

ரேஷன் கார்டுகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகம் 

எழுதியவர் Nivetha P
May 19, 2023
02:31 pm

செய்தி முன்னோட்டம்

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்திச்செய்யும் வகையில் மாநில அரசு ரேஷன் கடைகளை நடத்தி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பால் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், பருப்பு போன்ற பொருட்கள் மக்களுக்கு குறைந்தவிலையில் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் கூறப்படுகிறது. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளை அடிப்படையாக வைத்தே பொங்கல் பரிசு, கூடுதல் உணவுப்பொருள் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், கடைகளுக்கு சென்று வாங்குவதில் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்கு சிரமம் ஏற்பட கூடாது என்று நடமாடும் நியாய விலை கடைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

ரேஷன் 

புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் அறிவிப்பு 

அதன்படி, ரேஷன் கடைகளில் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணில் PDS 102 என்று குறிப்பிட்டு 9773904050 என்னும் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டும். அப்படி அனுப்பினால் ரேஷன் கடைகள் திறந்துள்ளதா இல்லையா என்று தெரிந்துக்கொள்ளலாம். அதே போல் PDS 101 என்னும் எண்ணுக்கு 9773904050 என்னும் எண்ணுக்கு அனுப்பினால் கடையில் உள்ள பொருளின் இருப்புகள் குறித்த விவரத்தினை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் மக்கள் கடை திறந்திக்கிறதா, என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்துக்கொள்ளலாம். கடைக்கு சென்று காலி பையுடன் திரும்பவேண்டிய அவசியம் இருக்காது. இதனையடுத்து பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் குறித்த புகாரினை அளிக்க 18005995950 என்னும் இலவச தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.